விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.
ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?
1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.
2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.
3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.
4. விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது. விஸ்டாவை விட வேகமாகவும் குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட அதிக Performance ஐ காட்டுகிறது.
மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?
1. அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது. இந்த சிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின் இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.
2. விண்டோஸ் 7 மேம்பாடு ஆலோசகர் (Windows 7 Upgrade Advisor) மென்பொருளை முதலில் கணனியில் நிறுவி அதட்கேட்ப செயல்பட முடியும். இது மைக்ரோ சொப்ட் இனால் இலவசமாக வழங்கப்படுவதாகும்.
இதனை தரவிறக்க
No comments:
Post a Comment